Enable Javscript for better performance
ஏரியைத் தூர்வார அனுமதி வழங்காத ஆட்சியர், ஆணையர் மீது புகார்- Dinamani

சுடச்சுட

    

    ஏரியைத் தூர்வார அனுமதி வழங்காத ஆட்சியர், ஆணையர் மீது புகார்

    By சேலம்  |   Published on : 15th April 2016 06:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளப்பட்டி ஏரியைத் தூர்வார அனுமதி தராத மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சேலம் மக்கள் குழுவினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

     சேலம் மக்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் கன்னங்குறிச்சி மூக்கனேரியைத் தூர்வாரி பராமரித்து வருகின்றனர்.

    அதேபோல, பள்ளப்பட்டி ஏரியைத் தூர்வார மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் சேலம் மக்கள் குழுவினர் அனுமதி கோரியிருந்தனராம். ஆனால், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

     இந்த நிலையில், பள்ளப்பட்டி ஏரியைத் தூர்வார அனுமதி வழங்காததைக் கண்டித்து, சேலம் மக்கள் குழுவின் நிர்வாகி பியூஷ் தலைமையில் ஏராளமானோர் ஊர்வலமாகச் சென்று பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.

     இந்த புகாரில், பள்ளப்பட்டி ஏரியைத் தூர்வார அனுமதி அளிக்கக் கோரி ஓராண்டாக முயற்சித்து வருகிறோம். ஆனால், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் ஏரியில் சாக்கடை கழிவுநீர் கலப்பதால் நிலத்தடி நீர் சீர்கெட்டு விட்டது.

    எனவே, பள்ளப்பட்டி ஏரியைத் தூர்வார அனுமதி வழங்காத ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மீது 166-ஆவது சட்டப்பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai