Enable Javscript for better performance
\\\"ஒடுக்குமுறைகளை படிக்கட்டுகளாக மாற்றியவர் அம்பேத்கர்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "ஒடுக்குமுறைகளை படிக்கட்டுகளாக மாற்றியவர் அம்பேத்கர்'

    By ஓமலூர்  |   Published on : 15th April 2016 06:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒடுக்குமுறைகளையே முன்னேற்றத்தின் படிக்கட்டுகளாக மாற்றியவர் அம்பேத்கர் என பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார்.

     பெரியார் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரின் 125-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, பல்கலைக்கழக நிர்வாகக் கட்டட முகப்பில் வைக்கப்பட்ட அம்பேத்கர் திருவுருவப் படத்துக்கு, துணை வேந்தர் சி.சுவாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது: அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஓயாது உழைத்ததுடன், இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவராக இருந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த பெருமைக்குரியவராக திகழ்ந்தார்.

     படித்த பள்ளியிலும், குடியிருந்த ஊரிலும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், ஒடுக்குமுறைகள் ஆகியனவற்றையே தமது முன்னேற்றத்துக்கான படிக்கற்களாக மாற்றிக் கொண்ட மனத்தின்மையும், அறிவாற்றலும் கொண்டவராக இருந்த அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றினை மாணவர்கள் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தங்களுக்கு ஏற்படும் சிறு தடையைக் கண்டு தளர்ந்து விடாமல், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அம்பேத்கரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

     பதிவாளர் மா.மணிவண்ணன், தேர்வாணையர் எஸ்.லீலா, பேராசிரியர்கள் என்.ராஜேந்திரன், மோ.தமிழ்மாறன், ஆட்சிக்குழு உறுப்பினர் செந்தில்வேல்முருகன், தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள்-அரசு கல்லூரிகள் எஸ்சி, எஸ்டி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் மாறவர்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai