Enable Javscript for better performance
கோட்டையூர் பரிசல் துறையில் படகு போக்குவரத்து நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    கோட்டையூர் பரிசல் துறையில் படகு போக்குவரத்து நிறுத்தம்

    By மேட்டூர்  |   Published on : 15th April 2016 06:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோட்டையூர் பரிசல் துறையில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    சேலம் மாவட்டம், கொளத்தூர், கோவிந்தபாடி, காவேரிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தருமபுரி மாவட்டம் ஒட்டனூர், நெருப்பூர், ஏரியூர் ஆகிய ஊர்களுக்குச் செல்ல காவிரியைக் கடந்து செல்லவேண்டும். அதன்படி கோட்டையூர் பரிசல் துறையிலிருந்து ஒட்டனூர் பரிசல் துறைக்கு படகில் பயணம் செய்து வந்தனர். இப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55 அடியாகச் சரிந்ததையடுத்து, காவிரி நீரோடை போல் ஆனது. இதனால் படகு இயக்க முடியாததையடுத்து, கடந்த சில தினங்களாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

     மணல் திட்டுகளாகவும், தொலைவு குறைவாகவும் இருப்பதால் பரிசல் மூலம் மட்டுமே காவிரியைக் கடப்பதாக பரிசல் ஓட்டிகள் தெரிவித்தனர். மீண்டும் நீர் மட்டம் 60 அடியாக உயர்ந்தால் மட்டுமே படகு போக்குவரத்து தொடங்கும் எனவும், தற்போது பண்ணவாடி நாகமரைக்கு படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது  எனவும் தெரிவித்தனர். நீர் மட்டம் சரிந்து வருவதால் இன்னும் ஒரு வார காலத்துக்குள் பண்ணவாடியிலும் படகு போக்குவரத்து நிறுத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai