Enable Javscript for better performance
சங்ககிரி, ஓமலூரில் தேர்தல் மேற்பார்வையாளர் திடீர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சங்ககிரி, ஓமலூரில் தேர்தல் மேற்பார்வையாளர் திடீர் ஆய்வு

    By சங்ககிரி/ஓமலூர்  |   Published on : 15th April 2016 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சங்ககிரி, ஓமலூரில் நடைபெற்றுவரும் தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து தேர்தல் மேற்பார்வையாளர் மனீஷ் கௌதம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

     சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்களிக்க வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்ட அவர், சங்ககிரி அருகே உள்ள விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆலத்தூர் ரெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சங்ககிரி சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கம், கிராமிய நடனம், வழுக்குமரம் ஏறுதல், உறி அடித்தல் ஆகிய நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டு, அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடத்தில் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்காளர் சேவை மையம், மற்றும் விழிப்புணர்வு சுவரொட்டிகள், பதாகைகளை பார்வையிட்டார்.

     அதையடுத்து சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

     இதில் சங்ககிரி தொகுதி தேர்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான சி.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சுந்தரராஜன், உதவி தேர்தல் அலுவலர் வி.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஓமலூரில்

    ஓமலூர் பேருந்து நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார். தேர்தலையொட்டி நடத்தப்பட்டு வரும் கலை நிகழ்ச்சிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்கம் ஆகியவற்றை பார்வையிட்ட அவர், பொதுமக்கள் அளித்த தேர்தல் உறுதிமொழி படிவங்களையும் ஆய்வு செய்தார். பின்னர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

     இதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சேலம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவுக்காக, தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறது. நகரங்களுக்கு இணையாக ஊரகப் பகுதிகளில் வாக்குப்பதிவு அதிகம் இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளது என்றார்.

     ஓமலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் என்.பழனிதேவி, மகளிர் திட்ட அலுவலர் எஸ்.ஈஸ்வரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சி.ராஜேந்திரன்,

    எஸ்.நர்மதா உள்ளிட்ட பலர் ஆய்வின் போது உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai