Enable Javscript for better performance
தம்மம்பட்டி, கெங்கவல்லி கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    தம்மம்பட்டி, கெங்கவல்லி கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

    By தம்மம்பட்டி  |   Published on : 15th April 2016 06:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளிலுள்ள சிவன், பெருமாள், அம்மன் கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

     தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

     தம்மம்பட்டி திருமண்கரடு முருகன் கோயில், செந்தாரப்பட்டி ஓணான்கரடு முருகன் கோயில், தம்மம்பட்டி ஸ்ரீஉக்ர கதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த கோயில்களுக்கு பக்தர்கள் கூட்டமாகச் சென்று வழிபட்டனர்.

     தம்மம்பட்டி உடையார்பாளையம் அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கோயிலிலிருந்து கடைவீதி, நடுவீதி, பேருந்து நிலையம் வழியே பால்குட ஊர்வலம் சென்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai