Enable Javscript for better performance
மாரியம்மன் கோயில் திருப்பணியை விரைந்து முடித்திட பக்தர்கள் அங்கபிரதட்சணம்- Dinamani

சுடச்சுட

    

    மாரியம்மன் கோயில் திருப்பணியை விரைந்து முடித்திட பக்தர்கள் அங்கபிரதட்சணம்

    By சேலம்  |   Published on : 15th April 2016 06:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணியை விரைந்து முடித்து, ஆடித் திருவிழாவை விமரிசையாக நடத்திடக் கோரி பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.

     சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது கோயிலில் சுற்றுப் பிரகாரம் இடிக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கோயில் பகுதி குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், சீரமைப்புப் பணிகள் மந்த நிலையில் நடப்பதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

     இந்த நிலையில், ஆடித் திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடும் வகையில் விரைவாக திருப்பணியை முடித்திட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதனிடையே கோட்டை பெரிய மாரியம்மன் அறக்கட்டளை சார்பில் 15-க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை அங்கபிரதட்சணம் செய்தனர்.

     இது தொடர்பாக, அறக்கட்டளை நிர்வாகி ரஜினி செந்தில் கூறுகையில், கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.

    இந்த விழாவின் போது உருளு தண்டம் போட்டு நேர்த்திக் கடன் செலுத்துதல், பொங்கலிட்டு வழிபடுதல் சிறப்பாக இருக்கும். தற்போது சுற்றுப் பிரகார பணிகள் நடைபெற்று வருவதால், உருளு தண்டம் போடுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, திருப்பணியை விரைவாக முடித்து ஆடித் திருவிழாவை வெகு விமரிசையாக நடத்திட வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai