Enable Javscript for better performance
யாருக்கு ஓட்டு?- Dinamani

சுடச்சுட

    

    சிவாஜி,

     தள்ளு வண்டிக்காரர். 

    பழைய பேருந்து

    நிலையம், சேலம்.

    படித்த இளைஞர்கள் பலர் வேலையில்லாத் திண்டாட்டத்தில் தற்போது அவதியுற்று வருகின்றனர். மாநகரம் வளர்ச்சியடையவில்லை. கீழ்மட்ட மக்கள் வாழ்வாதாரம் உயரவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேர்ந்துள்ளதால், அக் கட்சிக்கே எனது வாக்கு.

     

    ஜி.ராமசந்திரன்,

    தனியார் வங்கி ஊழியர், சேலம்.

    திமுக-வின் தற்போதைய தேர்தல் அறிக்கை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பாக உள்ளது. குறிப்பாக, மாணவ, மாணவியரின் கல்விக் கடன் ரத்து வரவேற்கத்தக்கது. எனவே, திமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்திட வேண்டும்.

     

    பி.ஹெச்.ஹரிஷ், 

    செல்லிடப்பேசி கடை,  சேலம் பழைய பேருந்து நிலையம்.

    அரசியல் கட்சிகள் என்றாலே ஊழல் எனும் நிலை வந்துவிட்டது. எந்த ஒரு கட்சியும் மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை. விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் துன்பத்தில் உள்ளனர். ஊழல் செய்யும் அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். எனது வாக்கு நோட்டாவுக்கு.

     

     

    வி.உஷா,

    பெட்டிக் கடை. குகை, சேலம்.

    தமிழக அரசு வழங்கும் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவி திட்டத்தால் பல ஏழைக் குடும்பப் பெண்களுக்கு திருமணங்கள் நடைபெற்றுள்ளன. தற்போதைய சூழ்நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர்களின் தரத்தை அறிந்து எனது வாக்கைப் பதிவு செய்வேன்.

     

    சு.பெர்னாட்ஷா ,

    முதுநிலை பட்டதாரி, அரூர்.

    அதிமுக, திமுக ஆட்சியில் ஊழல் அதிகம் நடைபெறுகிறது. மக்களுக்கான வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெறுவதில்லை. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை. எனவே, இந்த தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிப்பேன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai