Enable Javscript for better performance
சிண்டிகேட் வங்கி சார்பில் இ-சேவை மையம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் அரசு கலைக் கல்லூரி பகுதியில் சிண்டிகேட் வங்கி சார்பில் இ-சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    சிண்டிகேட் வங்கியின் சேலம் பிராந்திய மேலாளராக சிவகுரு புதியதாக பொறுப்பேற்றுள்ளார்.

    இதனிடையே அரசு கலைக் கல்லூரி சுந்தர் லாட்ஜ் பகுதியில் சிண்டிகேட் வங்கியின் இ-சேவை மையத்தைத் தொடங்கி வைத்து மேலாளர் சிவகுரு பேசியது:

    சிண்டிகேட் வங்கியின் சேலம் மண்டலம் 55 கிளைகளை கொண்டுள்ளது. சுமார் ரூ.3,300 கோடி வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறது.

    தற்போது புதியதாக தொடங்கப்பட்ட இ-சேவை மையத்தில் காசோலை செலுத்துதல், பணம் செலுத்துதல், ஏடிஎம் சேவை, பாஸ்புக் பிரிண்டிங், இணைய வங்கி சேவை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அனைத்து நாட்களிலும் இலவசமாகப் பெறலாம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai