Enable Javscript for better performance
சேலத்தில் 11 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்ந்தது!- Dinamani

சுடச்சுட

    

    சேலத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் சனிக்கிழமை மாலையுடன் முடிந்தது.

    சேலம் மாவட்டத்தில் சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, வீரபாண்டி, ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு, மேட்டூர் உள்ளிட்ட 11 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் சுமார் 191 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    தேர்தல் தேதி மார்ச் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பாமக மட்டுமே பிரசாரத்தில் முன்னணியில் இருந்தது. அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி, தமாக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்ததை் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது.

    முக்கியத் தலைவர்கள் வருகை:

    தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, ராஜ்நாத் சிங், சுரேஷ் பிரபு மற்றும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு, தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சேலம் மற்றும் புறநகர் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    திமுக தலைவர் மு.கருணாநிதி சேலத்தில் மே 8 ஆம் தேதி பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

    இதையடுத்து 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடைசி இரண்டு வாரங்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இறுதிகட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் அவரவர் போட்டியிடும் தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வேட்பாளர்களின் பிரசாரம் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சனிக்கிழமை மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.

    தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக திங்கள்கிழமை (மே 16) தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 19 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai