Enable Javscript for better performance
திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது- Dinamani

சுடச்சுட

    

    திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது

    By dn  |   Published on : 15th May 2016 06:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது என சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் பேசினார்.

    சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் சனிக்கிழமை இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். சேலம் 26 ஆவது வார்டுக்கு உட்பட்ட சாமிநாதபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் திறந்த ஜீப்பில் வீதி வீதியாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    மேலும் அரிசிபாளையம், சத்திரம், செவ்வாய்பேட்டை, முள்ளுவாடி கேட், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை உள்ளிட்ட இடங்களில் அவர் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

    பிரசாரத்தின் போது அவர் பேசியது:

    திமுக தேர்தல் அறிக்கை மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விவசாய கடன், கல்விக்கடன் ரத்து, பால் விலை லிட்டருக்கு ரூ.7 ஆக குறைப்பு, பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுடன் பால், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் விதம் வசதி, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் ஆகிய வாக்குறுதிகள் திமுகவிற்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும்.

    தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர். நான் வெற்றி பெற்றதும் வடக்கு தொகுதி முழுவதும் சாலை, சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன். மாதம் ஒரு முறை மக்களை சந்தித்து குறைகளை கேட்டு தீர்வு காண்பேன் என்றார்.

    பிரசாரத்தில் மத்திய மாவட்ட அவைத் தலைவர் கலையமுதன், மாநகர செயலாளர் ஜெயக்குமார், துணை செயலாளர் ரகுபதி, சேலம் நாடாளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் மோகன் குமாரமங்கலம், மாநகர மாவட்ட தலைவர் மேகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai