Enable Javscript for better performance
ஆத்தூர் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன்:எஸ்.கே. அர்த்தநாரி - Dinamani

சுடச்சுட

    

    ஆத்தூர் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன்:எஸ்.கே. அர்த்தநாரி

    By ஆத்தூர்  |   Published on : 21st May 2016 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெற்றி வாய்ப்பை இழந்தாலும் ஆத்தூர் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.கே.அர்ந்தநாரி தெரிவித்தார்.

    ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த எஸ்.கே.அர்த்தநாரி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியது:

    ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 65,493 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தேன். வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். ஆத்தூர் தொகுதி மக்களுக்குத் தொடர்ந்து சேவை ஆற்றுவேன். திமுக, காங்கிரஸ், கூட்டணிக் கட்சியினர் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள்,காவல் துறையினர், தொண்டர்கள், நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அப்போது, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி செயலர் எஸ்.கே.அணையரசு உடனிருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai