Enable Javscript for better performance
சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ விழா- Dinamani

சுடச்சுட

    

    சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    கார்த்திகை மாதம் சனிக்கிழமை, திரயோதசி திதியில் தான் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டார் என்பதால் இந்த பிரதோஷத்தையொட்டி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மாலையில் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. நந்தி பெருமானுக்கு வெண்ணெய்க் காப்பு மற்றும் வில்வ இலைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. சங்ககிரி, எடப்பாடி, பவானி, கொமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் சுவாமிகளை வழிபட்டுச் சென்றனர்.
    தம்மம்பட்டியில்... தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் மகாளய சனிப் பிரதோஷ விழா சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
    தம்மம்பட்டி ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயிலில் கார்த்திகை மாத மகாளய சனிப் பிரதோஷ விழா நடைபெற்றது.
    இதில் நந்தீஸ்வரருக்கு பால், தயிர், அரிசி மாவு, சந்தனம், குங்குமம், தேன் உள்ளிட்ட 15 வித பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. நந்தீஸ்வரர் அறுகம்புல், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    இதில் திருச்சி, ஆத்தூர், கெங்கவல்லி, நாகியம்பட்டி, மல்லியகரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தம்மம்பட்டி நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
    இதேபோல செந்தாரப்பட்டி, வீரகனூர், கெங்கவல்லி சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ விழா நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai