Enable Javscript for better performance
அடையாளம் தெரியாத இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை- Dinamani

சுடச்சுட

    

    அடையாளம் தெரியாத இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை

    By சேலம்,  |   Published on : 28th November 2016 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள நாம மலையில் அடையாளம் தெரிய இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார்.
     சேலம் அம்மாப்பேட்டை உடையாப்பட்டி புறவழிச் சாலையில் நாம மலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் பெருமாள் கோயில் உள்ளது.
     இதனிடையே ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் மற்றும் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலர் கோயிலுக்குச் செல்வதற்காக படிக்கட்டுகள் வழியாக ஏறிக் கொண்டிருந்தனர்.
     அப்போது 250 அடி உயரத்தில் பாறைகளில் ரத்தம் உறைந்து காணப்பட்டது. மேலும் சுமார் 10 அடி பள்ளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
     இதையடுத்து அம்மாப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். இதில் இளைஞரின் முகம் முழுவதும் பாறாங்கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அப்பகுதியில் மதுப்புட்டிகளும் சிதறி கிடந்தன.
     இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காதல் தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டரா என்பது குறித்தும், கொலையான நபர் யார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai