Enable Javscript for better performance
அனுமதியின்றி மது விற்றதாக இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆத்தூரில் அனுமதியின்றி மது விற்றதாக இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
     ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி (53), செல்லியம்பாளையம் பாப்பாத்தி (55) ஆகியோரிடமிருந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆத்தூர் காவல் உதவி ஆய்வாளர் எஸ்.மூர்த்தி தலா 5 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தார்.
     இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல நரசிங்கபுரத்தில் ஒரு வீட்டில் புதுப்படங்களின் சிடியை விற்றதாக முருகன் மகன் அண்ணாமலை (24)என்பவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
     பெண் கைது
     தலைவாசலை அடுத்த ராமசேஷபுரத்தில் சாராயம் விற்றதாக பெண்ணை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
     ராமசேஷபுரம் பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் உத்தரவின்படி தலைவாசல் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.செல்வராஜ் தலைமையில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது மணிவிழுந்தான் பகுதியில் உள்ள ராமசேஷபுரத்தில் செல்வம் என்பவரின் மனைவி செல்வி (45) என்பவரிடமிருந்து 5 லிட்டர் சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக், தனிப்பிரிவு காவலர் குணசீலன் ஆகியோர் செல்வியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்த சாராயத்தை அழித்தனர்
     இருவர் கைது
     ஏற்காட்டில் பாக்கெட் சாராயம் விற்றதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
     ஏற்காட்டில் குண்டூர், மாரமங்கலம் ஊராட்சி கூத்த முத்தல் பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது பாக்கெட் சாராயம் விற்றதாக தெப்பக்காடு பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் அரப்புளி (40), கூத்தமுத்தல் ஆண்டி மகன் குப்புசாமி (42) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இருவரிடமிருந்து 50 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai