Enable Javscript for better performance
ஓமலூரில் த.மா.கா. சார்பில் இரு சக்கர வாகனப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    ஓமலூரில் த.மா.கா. சார்பில் இரு சக்கர வாகனப் பேரணி

    By ஓமலூர்.  |   Published on : 28th November 2016 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓமலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கல்வி வளர்ச்சித் திட்டங்கள் குறித்த இரு சக்கர வாகனப் பிரசாரப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     த.மா.கா. 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சேலம் மேற்கு மாவட்டம் த.மா.கா.சார்பில் 10 ஊராட்சி ஒன்றியங்கள், 17 பேரூராட்சிகள், 2 நகராட்சிகள் என பல்வேறு இடங்களில் மத்திய
     -மாநில அரசுகளைக் கண்டித்து தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. இதன் நிறைவாக, பூரண மதுவிலக்கு, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, மகளிர் மேம்பாடு, கல்வி வளர்ச்சி, ஊழல், லஞ்ச ஒழிப்புத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
     இளைஞரணி மாநிலப் பொதுச் செயலர் எஸ்.ரகுநந்தகுமார் தலைமையில்
     நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணியை, காருவள்ளியில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கரு.வெ.சுசீந்திரகுமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பஞ்சுகாளிப்பட்டி, அமரகுந்தி, தாரமங்கலம், நங்கவள்ளி, மேச்சேரி, அரூர்பட்டி, செலவடை, கொங்கணாபுரம் வழியாக இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
     இந்த நிகழ்ச்சியில் ஓமலூர் வட்டாரத் தலைவர் ஓ.சி.ராஜேந்திரன், நிர்வாகிகள் சேதுராமன், செல்வமணி, கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai