Enable Javscript for better performance
ஓமலூர் பகுதியில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரம்- Dinamani

சுடச்சுட

    

    ஓமலூர் பகுதியில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரம்

    By ஓமலூர்,  |   Published on : 28th November 2016 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
     காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் மண்பாண்டங்கள் செய்வோர் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மண்பானை, அகல் விளக்குகள், அடுப்பு உள்ளிட்ட பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
     இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருநாள் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில். அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
     கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டிக்கு வந்து அகல் விளக்குகளை வாங்கிச் செல்கின்றனர். இதற்காக இரவு, பகலாக அகல் விளக்குகளை தயார் செய்து வருகிறோம். ஒரு நாளைக்கு ஒருவரால் சுமார் 800 முதல் ஆயிரம் அகல் விளக்குகள் வரை செய்ய முடியும். அகல் விளக்குகள் வெயிலில் இரு நாள்கள் காயவைக்கப்பட்ட பிறகு சூளையில் வைக்கப்படுகிறது.
     அதன் பிறகு அகல் விளக்குகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இதில் சிறிய விளக்கு, பெரிய விளக்கு, ஐந்து முகவிளக்கு என பல வகையான விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியால் ஒரு நாளைக்கு ஒருவருக்கு ரூ.300 கூலியாகக் கிடைப்பதாகவும், தற்போது ஒரு அகல் விளக்கு 35 காசு முதல் 50 காசு வரை விற்பனை செய்யப்படுவதாக அதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு கைத்தறித் தொழிலுக்கு இலவச மின்சாரம் அளிப்பதைப் போல, தங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கினால் தங்களது வாழ்வு வளம் பெரும் என்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai