Enable Javscript for better performance
கொளத்தூர் மிளகாய் விற்பனைக்கு வந்தது- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மாவட்டத்தில் பிரபலமான கொளத்தூர் மிளகாய் வத்தல் விற்பனைக்கு வந்துள்ளது.
     சேலம் மாவட்டம் கொளத்தூரில் விளைவிக்கப்படும் மிளகாய் பிற இடங்களில் விளைவிக்கப்படும் மிளகாயை விட தரமானது. இங்கு விளையும் மிளகாயை காம்பை நீக்கிப் பறிக்கலாம். இந்த மிளகாய் காரமாகவும், அதன் தூள் மணமாகவும் இருக்கும். அதனால் கொளத்தூர் மிளகாய்க்கு தமிழகம் முழுவதும் நல்ல கிராக்கி உள்ளது. நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கொளத்தூர் மிளகாய் விற்பனைக்கு வரும். தற்போது முதல் பருவமாக கொளத்தூர் மிளகாய் விற்பனைக்கு வந்துள்ளது. சீசன் தொடக்கம் என்பதால் ஒரு கிலோ கொளத்தூர் மிளகாய் ரூ.130 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொளத்தூர் வாரச் சந்தைக்கு 2,000 கிலோ மிளகாய் விற்பனைக்கு வந்தது. இந்த மிளகாயை வாங்க சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்தனர். வறட்சி காரணமாக மிளகாய் விளைச்சல் குறைவு என்பதாலும், முதன் முதலில் விற்பணைக்கு வந்ததாலும் நல்ல விலை கிடைத்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai