Enable Javscript for better performance
சங்ககிரியில் நவராத்திரி விழா- Dinamani

சுடச்சுட

    

    சங்ககிரி ஸ்ரீவாசவி டிரஸ்ட் மற்றும் வாசவி மகிளா சபா சார்பில் ஸ்ரீ வாசவி மஹாலில் நவராத்திரி விழா கொலு அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    நவராத்திரி விழாவையொட்டி அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. கலச வேள்வி பூஜைகளுடன் ஒன்பது படிகளில் கொலு வைக்கப்பட்டு மகளிர் குழுவினர் பக்தி பாடல்களைப் பாடி வழிபட்டனர். தினசரி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், இரவு 9 மணி முதல் 11 மணி வரையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai