Enable Javscript for better performance
சுகவனேஸ்வரர் கோயிலில் அக்.11-இல் நவராத்திரி நிறைவு விழா- Dinamani

சுடச்சுட

    

    சுகவனேஸ்வரர் கோயிலில் அக்.11-இல் நவராத்திரி நிறைவு விழா

    By DIN  |   Published on : 08th October 2016 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் நவராத்திரி நிறைவு விழா அக்டோபர் 11- ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 5,000 பெண்களுக்கு குங்கும பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
    சுகவனேஸ்வரர் கோயிலில் உள்ள சொர்ணாம்பிகை அம்மனுக்கு நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடத்தப்பட்டு வருகிறது.
    இதைத்தொடர்ந்து, அக்டோபர் 10- ஆம் தேதி ஆயுதபூஜையன்று காலை 9 மணிக்கு சொர்ணாம்பிகை அம்மன் சன்னதியில் கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜைகளுடன், ஆயிரம் திருநாமங்களால், 108 மூலிகைகளை கொண்டு லலிதா சகஸ்ரநாம ஹோமம் நடைபெறுகிறது.
    நவராத்திரி நிறைவு விழா அக்டோபர் 11- ஆம் தேதி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில் சுகவனேஸ்வரர், அதிகார நந்தீசுவரர், மஹா நந்தீசுவரர், நிருத்த கணபதி, தட்சிணாமூர்த்தி, வலம்புரி விநாயகர், ஐயப்பன், கங்கானமூர்த்தி, சரஸ்வதி, கஜலட்சுமி, துர்கா தேவி, ஆஞ்சநேயர், பைரவர், சூரியன் சன்னதிகளில் சுவாமிகளுக்கு வெள்ளிக் கவச சாத்துப்படி செய்யப்பட உள்ளது.
    மேலும் மாலை 6.30 மணியளவில் அம்மன், மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு லட்சார்ச்சனை செய்யப்பட்ட குங்கும பிரசாதம் 5,000 பெண்களுக்கு திருமாங்கல்ய கயிறுடன் வழங்கப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
    இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கோ.செ.மங்கையர்க்கரசி ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். வட்டாட்சியர் இரா.பொன்னுசாமி விழா நிர்வாக நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai