Enable Javscript for better performance
தகவல் தொடர்பு சாதனங்களால் மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: காவல் ஆணையர் சஞ்சய்குமார்- Dinamani

சுடச்சுட

    

    தகவல் தொடர்பு சாதனங்களால் மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: காவல் ஆணையர் சஞ்சய்குமார்

    By DIN  |   Published on : 08th October 2016 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தகவல் தொடர்பு சாதனங்களால் மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன என்று, சேலம் மாநகரக் காவல் ஆணையர் சஞ்சய்குமார் பேசினார்.
    சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் இணையதள குற்றங்களைக் கட்டுப்படுத்த உள்ள சட்டங்கள் மற்றும் மின்னணு சாட்சியங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
    இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாநகரக் காவல் ஆணையர் சஞ்சய்குமார்
    பேசியது:
    தகவல்தொடர்பு வசதிகள், நவீன சாதனங்கள் மூலம் உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். அதேநேரத்தில் மகளிருக்கு எதிரான குற்றப் போக்குகள் அதிகரித்து விட்டன.
    இணையதளம் தொடர்பு, முகநூல் உள்ளிட்டவைகள் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்வோர் அதிகரித்து வருகின்றனர். பெண்கள் முகநூல் மூலம் நட்பு கொள்கின்றனர். பெண்களுக்குத் தீங்கு ஏற்படாத விதத்தில் செயல்பட தகுந்த வழிகாட்டுதல் அவசியமாகும்.
    இது தனிப்பட்ட பிரச்னையல்ல, சமூகம் சார்ந்ததாகும். மேலும் இணையதள குற்றம் என்பது பயங்கரவாதம் வரையில் எட்டிவிட்டது.
    நவீன மின்னணு காலத்தில் நம்மைப் பற்றிய எவ்விதத் தகவலும் ரகசியம் கிடையாது என்பதே நிஜமாகும். ஏனெனில் தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் தேவைப்படும் தகவல்களைக் கேட்டறிய முடிகிறது.
    முக்கியமான அணுகுமுறை என்னவென்றால் குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்தால் அதற்குரிய ஆதாரங்களை அளித்து அவர்களுக்குண்டான தண்டனையைப் பெற்றுத் தருவது காவல் துறையின் கடமையாகிறது. இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். மாணவர்கள், எதிர்கால வழக்குரைஞர்களின் பங்களிப்பு முக்கியமாகும்.
    சமூக விரோதச் செயல்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள், பொதுமக்களுக்கு இடையூறு தரும் சம்பவங்களை வெளியிடங்களில் காணும் போது, உடனடியாக நுட்பமாக செல்லிடப்பேசியில் படமெடுத்து சேலம் மாநகரக் காவல் துறையின் கட்செவி அஞ்சல் எண்ணுக்கு (வாட்ஸ் ஆப்) அனுப்பினால் மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.
    இணையதள குற்றம் சட்டங்கள் தொடர்பான ஆலோசகர் வழக்குரைஞர் வி.ராஜேந்திரன் விளக்கமளித்தார். கல்லூரிச் செயலர் வழக்குரைஞர் டி.சரவணன் பேசுகையில், மாணவர்கள் உள்ளிட்டோர் இணையதளங்களை உபயோகப்படுத்தும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார். கல்லூரி முதல்வர் பேகம், முதன்மை நிர்வாக அலுவலர் ஏ.மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai