Enable Javscript for better performance
இளைஞர் கொலை வழக்கில் சகோதரர்கள் இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆத்தூரை அடுத்த பைத்தூர் புதூரில் நிலத் தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரர்கள் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
     ஆத்தூரை அடுத்த பைத்தூர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (38). விவசாயி. இவர் வியாழக்கிழமை மாலை பால் ஊற்றுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மறைந்து இருந்த மூவர், ஜெயராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.
     இதில் பலத்த காயமடைந்த ஜெயராமன் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல் கண்காணிப்பாளர் பொன் கார்த்திக்குமார், காவல் உதவி ஆய்வாளர்கள் அ.ஜெயக்குமார், சகுந்தலா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட ஜெயராமனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நான்கு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
     இந்த நிலையில் கொலையாளிகள், விழுப்புரம் மாவட்டம், அலம்பலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.பாஸ்கரபாபுவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று பைத்தூர் புதூர் ஊராட்சியைச் சேர்ந்த முருகேசன் மகன்கள் சுப்பிரமணி (24), பகுத்தறிவன் (22) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai