Enable Javscript for better performance
"கலப்பட பொருள்களில் பலகாரம் தயாரித்தால் கடும் நடவடிக்கை'- Dinamani

சுடச்சுட

    

    "கலப்பட பொருள்களில் பலகாரம் தயாரித்தால் கடும் நடவடிக்கை'

    By சேலம்,  |   Published on : 15th October 2016 12:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கலப்பட பொருள்களில் பலகாரம் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா தெரிவித்தார்.
     சேலம் மாவட்டத்தில் உள்ள பேக்கரி, இனிப்பு கடை உரிமையாளர்கள் மற்றும் வீடுகளில் பலகாரம் தயாரித்து விற்பனை செய்வோர் உள்ளிட்டோருக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     இதில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா, கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
     இதில், உணவுப் பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் அனுராதா பேசியது:
     தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு (அக்.29) இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்வோர் முறையான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
     மேலும் இனிப்பு தயாரிப்பு கூடத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும்.
     சான்றிதழ் பெறாதவர்கள் உடனே பெற வேண்டும். கலப்பட பொருள்களை கொண்டு பலகாரம் தயாரிக்கக்கூடாது.
     இதுபற்றி தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிருமி நாசினிகளை கூடத்தில் அவ்வப்போது தெளித்து ஈ, கொசுக்கள் வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
     இனிப்பு பலகாரத்தை 7 நாளிலும், பாலில் தயாரிக்கப்பட்ட பலகாரத்தை 3 நாளிலும், கார வகைகளை 20 நாளிலும் விற்பனை செய்ய வேண்டும். அதேபோல காலாவதியான பொருள்களை கொண்டு பலகாரம் தயாரிக்கக் கூடாது என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai