Enable Javscript for better performance
கல்வடங்கம் காவிரி ஆற்றில் பேரிடர் மேலாண்மை செயல் விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கல்வடங்கம் காவிரி ஆற்றில் பேரிடர் மேலாண்மை செயல் விளக்கம்

    By சங்ககிரி,  |   Published on : 15th October 2016 12:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேரிடர் மேலாண்மை தினத்தையொட்டி வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை சார்பில் வெள்ளத்தில் சிக்குபவர்களைக் காப்பாற்றுவது குறித்த செயல்முறை விளக்கம் தேவூர் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் அண்மையில் நடைபெற்றது.
     நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் சி.பால்பிரின்ஸ்லிராஜ்குமார் தலைமை வகித்தார். கல்வடங்கம் காவிரி ஆற்றில் கடந்த ஆடிபெருக்கு, மற்றும் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்தபோது நான்கு பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து காவிரி ஆற்றில் வெள்ளத்தில் சிக்குபவர்களை காப்பாற்றுவது, நீரில் முழ்கியவரை மீட்பது, வெள்ளத்தின் போது ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு பாதுகாப்பாகச் செல்வது, உயிரிழப்பைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு உத்திகளை அப்பகுதியில் குழுமியிருந்த வருவாய்த் துறை அலுவலர்கள், பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வடங்கம் காவிரி ஆற்றில் இறங்கி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சிவக்குமார், சுந்தரவடிவேல் ஆகியோர் தலைமையில் வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
     இதில் வட்டாட்சியர்கள் முத்துராஜா, சண்முகவள்ளி, வருவாய் ஆய்வாளர்கள் ராஜேஸ்வரி, மகேந்திரன், கிராமநிர்வாக அலுவலர்கள், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
     விழிப்புணர்வுப் பேரணி: பேரிடர் மேலாண்மை தினத்தையொட்டி வருவாய்த் துறை சார்பில் தேவூர் மேட்டுக்கடையிலிருந்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வரை அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவியர் எடுத்துச் சென்றனர் இதுகுறித்த துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களிடத்தில் விநியோகித்தனர். முன்னதாக பேரணியை வருவாய் கோட்டாட்சியர் தொடக்கிவைத்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai