Enable Javscript for better performance
சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளிலும் நீதிமன்ற அனுமதி பெற்று போட்டியிடுவோம்: கட்டட பட வரைவாளர் சங்கம- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளிலும் நீதிமன்ற அனுமதி பெற்று போட்டியிடுவோம்: கட்டட பட வரைவாளர் சங்கம்

    By சேலம்,  |   Published on : 15th October 2016 12:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் போட்டியிட நீதிமன்றத்தில் அனுமதி பெறுவோம் என மாநகராட்சி கட்டட பட வரைவாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
     சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் உள்ளூர் திட்டக் குழுமத்தின் உரிமம் பெற்ற கட்டட பட வரைவாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் ஏ.நடராஜன், செயலர் வி.அங்கப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு சங்கத்தின் தலைவர் ஏ.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:
     நகர் ஊரமைப்புத் துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் திட்ட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் முறையை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற உள்ளோம். மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
     உள்ளாட்சியில் கட்டட பட வரைவாளர்களின் பங்கு இருந்தால் பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக செய்து முடிக்க முடியும். மேலும், தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்படும் என்ற காரணத்திற்காக சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் கட்டட பட வரைவாளர்கள் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம்.
     ஏற்கெனவே நாங்கள் விண்ணப்பித்த வேட்புமனுக்களை அனுமதிக்க முடியாது என்ற காரணம் கூறி மாநகராட்சி ஆணையர் நிராகரித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை எடுத்துக் காட்டியும் அதனை ஏற்க மறுக்கின்றனர்.
     மேலும், நாங்கள் தேர்தலில் போட்டியிட்டால் மாநகராட்சித் திட்டப் பணிகளில் நடைபெறும் ஊழல்களை வெளிப்படுத்துவோம் என்ற காரணத்திற்காக தங்களை நிராகரிக்கின்றனர்.
     உயர் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று தேர்தலில் போட்டியிடுவோம் என்றார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai