Enable Javscript for better performance
மேட்டூரில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூரில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பறிமுதல்

    By மேட்டூர்,  |   Published on : 15th October 2016 12:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டூர் நீர்த் தேக்கப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட வலைகளை மீன்வளத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
     மேட்டூர் நீர்த் தேக்கத்தில் கட்லா, ரோகு, மிர்க்கால் உள்ளிட்ட பலவகையான மீன்களை, இரண்டாயிரம் மீனவர்கள் உரிமம் பெற்று பிடித்து வருகின்றனர். மீன் வளத்தை பாதுகாக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சிலர் தடை செய்யப்பட்ட சிறு ஆய வலைகளைப் பயன்படுத்தி மீன் குஞ்சுகள் வளரும் முன்பாக அவற்றைப் பிடித்து மீன்வளத்தை அழித்து வருகின்றனர்.
     இந்த நிலையில் மீன்வளத் துறை ஆய்வாளர் கதிரேசன் தலைமையில் மீன்வளத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கோட்டையூர், செட்டிப்பட்டி, பாலாறு பகுதிகளில் படகில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கிடமான காவிரிக் கரையில் சோதனையிட்டனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 8 சிறு ஆயவலைகளை கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட வலைகளுக்கு யாரும் உரிமைக் கோராததால் அவற்றை மீன்வளத் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai