சேலம் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பட்ட மேற்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) முதல் வழங்கப்படுகின்றன.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் நிகழாண்டில் எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், எம்.எஸ்சி. கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், புள்ளியியல், புவியியல், புவியமைப்பியல், வரலாறு, பொருளியல் மற்றும் எம்.ஏ. மனித உரிமைகள், எம்.காம். வணிகவியல், எம்.சி.ஏ., எம்.எஸ்.சி. விலங்கியல், எம்.காம் கூட்டுறவு ஆகிய முதுநிலை பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை கல்லூரி வேலை நாள்களில் வழங்கப்படும். ஓ.சி. மற்றும் பி.சி., எம்.பி.சி. பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.60 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு இலவசமாகப் பெற அசல் சாதி சான்றிதழை முன்னிலைப்படுத்தி, சான்றொப்பமிட்ட நகல் ஒன்று செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் நேரில் பெற்றுக் கொள்ளப்படும். தபால் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம் என கல்லூரி முதல்வர் பெ.எஸ்தர் ஜாய்ஸ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.