வீரகனூர் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பிடம்

வீரகனூர் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றனர்.
Published on
Updated on
1 min read

வீரகனூர் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றனர்.
 இப்பள்ளியில் அதிகபட்ச மதிப்பெண் 1182. இதனையடுத்து 1171 மதிப்பெண்களை மூவரும், 1170 மதிப்பெண்ணை ஒருவரும் பெற்றுள்ளனர்.
 1180-க்கு மேல் ஒருவரும், 1170-க்கு மேல் 5 பேரும், 1150-க்கு மேல் 34 மாணவர்களும், 1100-க்கு மேல் 109 பேரும், 1000-க்கு மேல் 256 பேரும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
 கணிதத்தில் 25, வேதியியலில் 2, இயற்பியலில் 1, கணினி அறிவியலில் 1, என மொத்தம் 29 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மூன்று மாணவர்கள் 2 பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீட், ஏஐஇஇஇ மற்றும் ஜெஇஇ ஆகியவற்றுக்கான நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்புகள் பள்ளியிலேயே நடத்தப்படுகிறது.
 பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியான நாள் முதல் 11-ஆம் வகுப்பு சேர்க்கை நடைபெறும். 10-ஆம் வகுப்பில் 480-க்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. பள்ளி அளவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு பள்ளித் தலைவர் அருள்குமார், செயலர் தங்கவேல், பொருளாளர் முத்தம்மாள், கல்வி ஆலோசகர்கள் வெங்கடாசலபதி, இளையப்பன், பழனிவேல், முதல்வர் செல்வராஜன் ஆகியோர் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com