உதவி வேளாண் அலுவலர் பணி: வேலைவாய்ப்புத் துறை பட்டியல் தயாரிப்பு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 196 உதவி வேளாண் அலுவலர் பணிக் காலியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டியல் வேலைவாய்ப்புத் துறையால் தயாரிக்கப்பட உள்ளது.
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 196 உதவி வேளாண் அலுவலர் பணிக் காலியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டியல் வேலைவாய்ப்புத் துறையால் தயாரிக்கப்பட உள்ளது.
 இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் வெளியிட்ட செய்தி:
 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 196 உதவி வேளாண் அலுவலர் பணிக் காலியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டியல் வேலைவாய்ப்புத் துறையால் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான வயது வரம்பு 30.4.2017 பொதுப் பிரிவினருக்கு 30. இதர பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. இதற்கான கல்வித் தகுதி 12 ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன் வேளாண்மை அல்லது தோட்டக் கலையில் பட்டயப்படிப்பு அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முடித்து பதிவு செய்திருக்க வேண்டும். பொதுப் பிரிவில் முன்னுரிமையற்றோர் பெண்கள் 25.06.2014 வரையும், பொதுப் பிரிவில் முன்னுரிமையற்றோர் 06.07.2006 வரையும் பொதுப் பிரிவில் முன்னுரிமையுள்ளோர் (ஆதரவற்ற விதவை. கலப்புத்திருமணம் புரிந்தோர், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினரை சார்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் ) நாளது தேதி வரை பதிவு செய்த பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்படுவர். உரிய தகுதியுள்ள அனைத்துப் பதிவுதாரர்களும், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 26 ஆம் தேதிக்குள் தங்களது பதிவினை நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com