சங்ககிரி மலைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதற்காக மேற்கொண்ட பணிகளை வருவாய்த் துறையினர் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.
சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூர் கிராமம், ஓலப்பட்டியனூர் பகுதியில் சங்ககிரி மலைக்குச் சொந்தமான இடத்தில் பள்ளத்தூர், சங்ககிரி மேற்கு, முனியப்பம்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 60 பேர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவதற்காக இடத்தை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியிலிருந்து பொதுமக்கள், வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் வட்டாட்சியர் வி.முத்துராஜா தலைமையில் சங்ககிரி காவல் ஆய்வாளர் டி.செல்வம், வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் பிரபு ஆகியோர் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை செய்து தொல்பொருள் துறையினருக்கு சொந்தமான மலை இடத்தில் அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்வது குற்றமாகும் என அறிவுரைக் கூறி அனுப்பி வைத்தனர். அதனையடுத்து அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்வது தடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.