ஈச்சம்பட்டி ராசி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகிகள் புதன்கிழமை பரிசு வழங்கி பாராட்டினர்.
ஆத்தூரை அடுத்த ஈச்சம்பட்டி ராசி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 495, 494, 493 மதிப்பெண்களை மாணவ, மாணவிகள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். கடந்த 11 ஆண்டுகளாக இப்பள்ளியில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் இப்பள்ளியில் 490- க்கு மேல் 8, 480-க்கு மேல் 30, 470 -க்கு மேல் 46, 460-க்கு மேல் 59, 450-க்கு மேல் 7, 400- க்கு மேல் 106 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதத்தில் 9, அறிவியலில் 5, சமூக அறிவியலில் 19 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த மாணவ, மாணவிகளை, பள்ளித் தலைவர் கே.ராதாகிருஷ்ணன், செயலர் டி.மாசிலாமணி, கல்விக்குழுத் தலைவர் ஆர்.கனகராஜன், பொருளாளர் பி.குமரேசன், துணைத் தலைவர் சுசிலாராஜமாணிக்கம், இணைச் செயலர் ஜே.ஆனந்த் மற்றும் இயக்குநர்கள், முதல்வர், பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் பரிசு வழங்கி பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.