ஓமலூர் அருகே இளம் பெண் சாணிப் பவுடரை அருந்தி உயிரிழந்த சம்பவம் குறித்து சார் -ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி தாண்டானூர் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன். இவருக்கும் சேலம் சோளம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த தனம் (25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கலையரசன் பூசாரிப்பட்டியில் உணவகம் நடத்தி வந்தார். மேலும் அவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கடன் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் ஏற்பட்ட பிரச்னைகளால் மனமுடைந்த தனம், செவ்வாய்க்கிழமை இரவு தனது 4 வயது குழந்தைக்கு சாணிப் பவுடரை அரைத்துக் கொடுத்துவிட்டு, தானும் குடித்து விட்டதாக தெரிகிறது. இதனால் குழந்தை வாந்தி எடுத்ததால் அக்கம் பக்கத்தினர் பார்த்த போது விஷம அருந்தியது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் மீட்ட பொதுமக்கள் ஓமலூர் அரசு மருத்தவமனைக்கு கொண்டு சென்றர். இதில், தனம் உயிரிழந்தார். குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் மேட்டூர் சார் -ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.