கர்நாடகத்தில் மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சேலத்தில் அனைத்து ஊடகத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த செயலைக் கண்டித்து சேலத்தில் அனைத்து ஊடகத்தினர் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், கௌரி லங்கேஷ் படுகொலைக்குக் காரணமானவர்களை கண்டுபிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும், ஊடகத்துறையில் பணியாற்றுவோருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தனி சட்டம் இயற்ற வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம் கோரிக்கை விடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.