Enable Javscript for better performance
சங்ககிரியில் கொசு ஒழிப்பு குழுவினர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சங்ககிரி வருவாய்த் துறை மற்றும் பேரூராட்சி சார்பில் சங்ககிரி - பவானி பிரதான சாலையில் உள்ள லாரி பட்டறைகளில் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
    சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் டி.ராமதுரைமுருகன் தலைமையில்,  வட்டாட்சியர் கே.அருள்குமார்,  பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் பவானி பிரதான சாலையில் உள்ள லாரி பட்டறைகள் மற்றும் டயர் ரீட்ரெடிங் தனியார் நிறுவனங்களில் தண்ணீர் தேங்கி நின்று கொசுப் புழுக்கள் உற்பத்தியாக காரணமாக உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தனர். அதில் நான்கு பட்டறைகளில் பழைய டயர்களில் நீர்தேங்கி நின்று புழுக்கள் இருப்பது கண்டுபிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். பின்னர் அவர்களுக்கு அறிவுரை வழங்கி துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். பல இடங்களில் தொட்டிகளில் தேங்கியிருந்த நீரை பணியாளர்கள் ஒருங்கிணைந்து வெளியேற்றி பிளீச்சிங் பவுடரை தெளித்தனர்.  அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கொசு உற்பத்தியைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai