மேட்டூர் அருகே ஒரே நேரத்தில் மூன்று கன்றுகளை பசு ஒன்று ஈன்றுள்ளது.
மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் புதுவேலமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி மணி, தனது தோட்டத்தில் சில பசுக்களை வளர்த்து, பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். இவர் வளர்த்து வந்த சிந்து பசு ஒன்று திங்கள்கிழமை ஒரே நேரத்தில் மூன்று கன்றுகளை ஈன்றது. பசுக்கள் ஒரே சமயத்தில் ஒரு கன்று மட்டும் ஈன்றும். சில சமயங்களில் இரு கன்றுகளை ஈன்றும். மணி வளர்த்த பசு ஒரே நேரத்தில் முன்று கன்றுகளை ஈன்றுள்ளதால், அதனை அப் பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் செல்கின்றனர்.