கோவை - பிகானீர் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை இசார் ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை-பிகானீர் (வண்டி எண் 22476) இடையே வாராந்திர ரயில் சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சனிக்கிழமை மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு திங்கள்கிழமை பகல் 12.55 மணிக்கு பிகானீர் சென்றடையும். தற்போது இந்த ரயில் இசார் ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், மாலை 5.55 மணிக்கு இசார் ரயில் நிலையம் சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.