மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாகச் சரிந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை தணிந்ததால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து சரிந்தது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது. கர்நாடக அணைகளின் உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாகச் சரிந்து வந்தது. திங்கள்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 11,633 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக நொடிக்கு 18,300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால், திங்கள்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.06 அடியாகச் சரிந்தது. அணையின் நீர் இருப்பு 91.97 டி.எம்.சி.