ஆத்தூர் க்ரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஹிரோஷிமா தின நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் க்ரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஹிரோஷிமா தின நாளையொட்டி ஆத்தூர் ரோட்டரி சங்கம் மற்றும் சாரல் கலை மன்றம் இணைந்து "வாழும் பூமியை வாழவிடு' எனும் கவியரங்கை நடத்தியது.
இதில் இயற்கையை வாழவைக்கும் இயற்கை உணவு, பிளாஸ்டிக் ஒழித்தல், இயற்கை உரங்களை பயன்படுத்துதல், மரம் வளர்த்தல்,விவசாயத்தை பேணுதல், நதிநீர் இணைப்பு போன்ற நிகழ்வுகளை விளக்கி பேசினர். நிகழ்ச்சியில் ஆத்தூர் ரோட்டரி சங்கத் தலைவர் கே.பி.மாதேஸ்வரன், செயலர் ஆர்.ராஜா, முன்னாள் தலைவர்கள் ஏ.ஜி.ராமச்சந்திரன், என்.செந்தில், க்ரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் தேசிங்குராஜன், செயலர் கண்மணி, சாரல் கலை மன்ற சுகுணன் குழுவினர் கலந்துகொண்டனர்.
இதே போல் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட தளவாய்ப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஹிரோஷிமா தின நாள் அனுசரிக்கப்பட்டது. தலைமையாசிரியை (பொ) க.ராஜேஸ்வரி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.