விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விமான நிலைய விரிவாக்கம் கூடாது: ஜி.கே.வாசன்

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யக் கூடாது என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யக் கூடாது என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
ஓமலூர் அருகே உள்ள சேலம் விமான நிலையத்தை 570 ஏக்கரில் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக காமலாபுரம், பொட்டியபுரம், சிக்கனம்பட்டி, தும்பிபாடி ஆகிய கிராமங்களில் உள்ள விளைநிலங்களை கையப்படுத்துவதாகக் கூறி, கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 
இந்த நிலையில், தும்பிபாடி கிராமத்துக்கு திங்கள்கிழமை நேரில் சென்ற ஜி.கே.வாசன் நிலங்களை இழக்கும் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "பல தலைமுறைகளாக இங்கே வசித்து வரும் எங்களையும், நன்கு விளையக்கூடிய எங்கள் நிலத்தையும் எடுக்கின்றனர். எங்களை கொன்று விட்டு நிலத்தை எடுத்து செல்லட்டும், நீங்கள் தான் எங்கள் நிலத்தை காப்பாற்றித் தர வேண்டும்' என வாசனிடம் கிராம மக்கள் கதறி அழுதனர்.
இதைத் தொடர்ந்து, வாசன் பேசியது:-
மக்களுக்காகத் தான் திட்டம் இருக்கும். விமான நிலையத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வளர்ச்சித் திட்டங்களை அரசு கொண்டு வரட்டும். 
இந்தக் கிராமங்களில் பாதிக்கப்படும் 5 ஆயிரம் மக்களை எதிர்த்து இந்தத் திட்டத்தை கொண்டு வர அனுமதிக்க முடியாது. விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முனைப்புக் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
தொடர்ந்து, அரசு சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நிலங்களை எடுக்கும் முயற்சியில் இறங்கினால், இங்குள்ள விமான நிலையத்தை இழுத்து மூடும் போராட்டத்தை த.மா.கா. நடத்தும் என்றார். 
அப்போது, கட்சியின் சேலம் மேற்கு மாவட்டத்  தலைவர் கரு.வெ.சுசீந்தரகுமார், இளைஞர் பிரிவு மாநிலத் தலைவர் யுவராஜா, மாநில பொதுச் செயலர் எஸ்.ரகுநந்தகுமார்,  ஓமலூர் வட்டாரத் தலைவர் ஓ.சி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com