கோமாரி நோய்த் தாக்கம்:  மாட்டுச் சந்தையை கலைத்த போலீஸார்

சேலம் மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை மீறி, வீரகனூரில் நடைபெற்ற மாட்டுச் சந்தையை போலீஸார் அகற்றினர்.

சேலம் மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை மீறி, வீரகனூரில் நடைபெற்ற மாட்டுச் சந்தையை போலீஸார் அகற்றினர்.
சேலம் மாவட்டத்தில் கோமாரி நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதால், மாட்டுச் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வீரகனூரில் சனிக்கிழமை நடைபெறும் மாட்டுச் சந்தைக்காக வெள்ளிக்கிழமை இரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
தகவலறிந்த வீரகனூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீஸார், சந்தைகூடும் பகுதிக்குச் சென்று மாடுகளை திரும்பி அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனாலும், பலர் தங்களது மாடுகளை அப் பகுதியியிலே விற்பனைக்கு நிறுத்தியிருந்தனர். இதையடுத்து, அந்த மாடுகளை விரட்டியடித்து வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com