சேலம் - கோவை பயணிகள் ரயில் இன்று முதல் 11 நாள்களுக்கு ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக சேலத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் சனிக்கிழமை  (டிச.8) முதல் 11 நாள்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக சேலத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் சனிக்கிழமை  (டிச.8) முதல் 11 நாள்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு -திருப்பூர் இடையே பராமரிப்புப் பணிகள் காரணமாக சேலம் - கோவை இடையே இயக்கப்பட்டுவரும் பயணிகள் ரயில்  (வண்டி எண் 66602,  66603) டிச.8 ஆம் தேதி முதல்  டிச.18 ஆம் தேதி வரை 11 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 56713 திருச்சி - பாலக்காடு இடையே இயக்கப்படும் ரயில் கரூர் - ஈரோடு மார்க்கத்தில் டிச.8, 10,  16  ஆகிய மூன்று நாள்களுக்கு 40 நிமிடங்கள் வரையும்,  டிச.9,  11, 12, 13, 14, 17 ஆகிய தேதிகளில் 30 நிமிடங்கள் வரையும் நின்று செல்லும்.
வண்டி எண்  22619  பிலாஸ்பூர் -  திருநெல்வேலி ரயில், ஜோலார்பேட்டை- ஈரோடு மார்க்கத்தில் டிச.12 ஆம் தேதி 40 நிமிடங்கள் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com