தேன்வாழை விலை சரிவு

தம்மம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. அதில், தேன்வாழை, மொந்த


தம்மம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. அதில், தேன்வாழை, மொந்தன், செவ்வாழை, பூவன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
விளைந்த வாழைத்தார்கள் தினந்தோறும் காய்கறி மண்டிகளுக்கும், முள்ளுக்குறிச்சியில் நடைபெறும் வாழைத்தார் மண்டிகளுக்கும் இப் பகுதியினர் எடுத்துச் செல்கின்றனர். இந்த நிலையில கடந்த ஒரு வாரமாக வாழையில் தேன்வாழை ரகங்கள் அதிகளவில் வரத்து உள்ளது.
இதனால் தேன்வாழை பெரிய ரகம் (100 பழங்கள் கொண்டது) ரூ. 600-க்கு விற்ற நிலையில் தற்போது அதில் பாதியாக ரூ. 300-க்கும், சிறிய ரக தார்கள் 400-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ. 220-க்கும் மண்டிகளில் ஏலம் போனது. இதனால், கடைகளில் தேன்வாழை சீப்புகள் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com