பெண்களை இழிவாகப் பேசிய நபரைக் கைது செய்யக் கோரிமனு

பெண்களை இழிவாகப் பேசி சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபரைக் கைது செய்ய வேண்டும் என பாமகவினர் காவல்துறையில் புகார் மனு


பெண்களை இழிவாகப் பேசி சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபரைக் கைது செய்ய வேண்டும் என பாமகவினர் காவல்துறையில் புகார் மனு அளித்தனர்.
சேலம் மாநகர காவல்துறை ஆணையரக அலுவலகத்துக்கு வந்த பாமக மாநிலத் துணை பொதுச் செயலாளர் இரா. அருள் உள்ளிட்டோர் துணை ஆணையர் தங்கதுரையை சந்தித்து அளித்த புகார் மனு:
அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி இளைஞர் ஒருவர் ஜாதி வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். அந்த நபரைக் கைது செய்ய வேண்டும். மேலும், அவருக்குப் பின்னால் இருக்கும் சமூக விரோத கும்பலையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
சங்ககிரியில்... சங்ககிரி காவல் நிலையத்தில் மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை, சேலம் தெற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பாமக உள்ளிட்ட கட்சி, அமைப்புகளின் சார்பில் சனிக்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.
மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் மாநிலப் பொருளாளர் எ. கந்தசாமி, சேலம் தெற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் சரவணன், கிருஷ்ணமூர்த்தி, சங்ககிரி வட்ட கொங்கு இளைஞர் சங்க வட்டாரத் தலைவர் ராமசாமி, நிர்வாகி பாலு, பாட்டாளி மக்கள் கட்சி சேலம் புறநகர் மாவட்டத் துணைச் செயலர் இல. சத்ரியசாமிநாதன், சங்ககிரி ஒன்றியச் செயலர் வி. பிரகாஷ், நகரச் செயலர் அஸ்வீன், ஒன்றிய அமைப்புச் செயலர் என். வடிவேல், மாவட்ட இளைஞரணி துணை செயலர் கார்த்திக் ஆகியோர் சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளர் டி. செல்வத்திடம் தனித்தனியாக அளித்துள்ள புகார் மனு:
நவம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தில் சமூக வலைத்தளங்களான கட்செவி அஞ்சல், முகநூல், யு-டியூப் உள்ளிட்டவைகளில் பிற சமுதாய பெண்களைத் தவறாகப் பேசி ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதை பேசிய நபரைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com