மாவட்ட தொழில் மையம் மூலம் 1,368 தொழில்நிறுவனங்களுக்கு ரூ.18 கோடி மானியம்

மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 2011 முதல் தற்போது வரை 1,368 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.18.65 கோடி

மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 2011 முதல் தற்போது வரை 1,368 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.18.65 கோடி மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ராமசந்திரன் தெரிவித்தார்.
தமிழக  அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையின் கீழ் இயங்கிவரும் சேலம் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் குறு, மற்றும் சிறு தொழில்களின் மேம்பாட்டுக்கெனவும், படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கும், சுய தொழில் முனைவோருக்கும் தொழில் துவங்குவதற்கான மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க உரிய நடவடிக்கைகள் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
தமிழக அரசு சமுதாயத்தில் பின்தங்கியுள்ளவர்களை முன்னேற்ற, படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளது. 
இத்திட்டம் மூலம் உற்பத்தி, சேவை,  வியாபார நிறுவனங்கள் தொடங்கிட முறையே அதிகபட்சம் ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.1 லட்சம் வரையான திட்டங்களுக்கு பொருந்தும். திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு அரசு மானியம் வழங்கப்பட்டு
வருகிறது. 
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு சுய தொழில்முனைவோருக்கான பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் ஆகிய கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு
வருகின்றன.    
சேலம் மாவட்டத்தில் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 2011-18 வரை 107 நிறுவனங்களுக்கு ரூ.5.31 கோடி மதிப்பீட்டில் மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 
மேலும், இத்திட்டத்தின் மூலம் 2018-19 ஆண்டில் 12 நிறுவனங்களுக்கு ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் மானியம் என மொத்தம் 119 நிறுவனங்களுக்கு ரூ.6.53 கோடி மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் 2011-18 வரை 954 நிறுவனங்களுக்கு ரூ.5.94 கோடி மதிப்பீட்டில் மானியத் தொகை
வழங்கப்பட்டுள்ளது. 
மேலும், இத்திட்டத்தின் மூலம் 2018-19 ஆண்டில் 14 நிறுவனங்களுக்கு ரூ.11.86 லட்சம் மதிப்பீட்டில் மானியம் என மொத்தம் 968 நிறுவனங்களுக்கு ரூ.6.06 கோடி மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் 2011-18 வரை 257 நிறுவனங்களுக்கு ரூ.5.33 கோடி மதிப்பீட்டில் மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 
மேலும், இத்திட்டத்தின் மூலம் 2018-19 ஆண்டில் 24 நிறுவனங்களுக்கு ரூ.72.81 லட்சம் மதிப்பீட்டில் மானியம் என மொத்தம் 281 நிறுவனங்களுக்கு ரூ.6.06 கோடி மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
 மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 2011 முதல் தற்போது வரை 1368 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.18.65 கோடி மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசால் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை சேலம் மாவட்டத்திலுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் அறிந்து பயனடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com