Enable Javscript for better performance
அரசுத் துறைகள் குறித்த பொதுமக்களின் பயன்பாட்டுக்கு காணொலிக் காட்சி மூலம் நவீன தொழில்நுட்பம் துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அரசுத் துறைகள் குறித்த பொதுமக்களின் பயன்பாட்டுக்கு காணொலிக் காட்சி மூலம் நவீன தொழில்நுட்பம் துவக்கம்: நாட்டிலேயே முதன்முறையாக சேலத்தில் அறிமுகம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியாவிலேயே முதன்முறையாக அரசுத் துறைகள் குறித்த பொதுமக்களின் பயன்பாட்டுக்கான நவீன தகவல் தொழில்நுட்பத்தை தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை (பிப்.8) தொடங்கி வைத்தார்.
    இந்தியாவிலேயே முதன்முறையாக அரசுத் துறைகள் குறித்த பொதுமக்களின் பயன்பாட்டுக்கான நவீன தகவல் தொழில்நுட்பத்தை தமிழகத்தில் சேலம் மாவட்டத்திலும், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியிலும் காணொலிக் காட்சி வாயிலாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    இதனிடையே, புதிய தொழில்நுட்பம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது குறித்து, மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸுடன், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் காணொலிக் காட்சி மூலம் தில்லியில் இருந்து துவக்கி வைத்து, கலந்துரையாடினார்.
    நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் கூறியது:
    வளர்ந்து வரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப அரசின் திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் தங்கள் இடத்தில் இருந்தவாறு நவீன தொழில்நுட்பம் மூலம் முழுமையாகப் பயன்பெறும் நோக்கத்தோடு, இந்தியாவிலேயே தமிழகத்தில் சேலம் மாவட்டத்திலும், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியிலும் புதிய தொழில்நுட்பம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
     இணையதளத்தை ஸ்மார்ட் போன், ஐ போன், டேபிளட், மடிக்கணினி, கணினி உள்ளிட்ட அனைத்து சாதனங்களிலும் எளிதாக பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும், மாற்றுத் திறனாளிகள் 'பிரெய்லி' முறையில் விவரங்களை அறிந்திடும் வகையிலும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேலம் மாவட்டத்தின் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகள், அலுவலக முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள் இடம்பெற்றுள்ளன.
    குறிப்பாக, ஆங்கிலத்தில் மட்டும் அல்லாமல் தேவைப்படுபவர்கள் தமிழ் மொழியையும் தேர்ந்தெடுத்து அரசுத் துறைகளின் தங்களுக்கு தேவையான விவரங்களை அறிந்து கொள்வதோடு மட்டும் அல்லாமல், பிற எந்த மொழி வேண்டுமானாலும், தேர்வு செய்து பயன்படுத்தும் வகையில் சிறப்பாக புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    மத்திய அரசின் சைபர் செக்யூரிட்டி விதிமுறைகளை 100 சதவீதம் முழுமையாகப் பின்பற்றி மேற்குறிப்பிடப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
    இதனால் வெளி நபர்கள் இந்த தொழில்நுட்பத்தை எவ்விதத்திலும் பயன்பாட்டில் தடை செய்ய முடியாதபடி தகுந்த பாதுகாப்பு அம்சங்கள் அமையப் பெற்றுள்ளன.
    சேலம் மாவட்டம் குறித்த அனைத்து பொது தகவல்கள் மற்றும் வருவாய்த் துறை, சுற்றுலாத் துறை, மாற்றுத் திறனாளிகள் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொதுமக்கள் தங்கள் இடங்களில் இருந்து கொண்டே தேவையான அரசுத் துறையின் பல்வேறு சேவைகளையும் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    இது தற்கால சூழ்நிலையில் தேவையற்ற காலவிரயத்தைத் தவிர்ப்பதற்கும், அடுத்த தலைமுறைக்கு தேவையான முன்னேற்ற நடவடிக்கையாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்ட நிர்வாகத்தால் கடந்த 4 மாதங்களாக கடுமையான முயற்சியின் மூலம் அரசின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.
    நிகழ்ச்சியில், தேசிய தகவலியல் அலுவலர் ரமேஷ், கூடுதல் தகவலியல் அலுவலர் விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai