Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் நினைவாற்றல் தியானப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    தேவண்ணகவுண்டனூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தன்னம்பிக்கை, நினைவாற்றலை வளர்க்கும் தியானப் பயிற்சி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    பள்ளித் தலைமையாசிரியர் க. திருஞானம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சங்ககிரி கல்வி மாவட்ட ஜே.ஆர்.சி. இணை கன்வீனர் ஆர். முருகன் இப்பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கமளித்தார். சங்ககிரி ஓம்ராம் அறக்கட்டளைத் தலைவர் சுந்தரவடிவேல் பயிற்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் நினைவாற்றல் தரும் வஜ்ராசனம், சாவசனம், சண்முகி ருத்ரா தியானம் உள்ளிட்ட தியானப் பயிற்சிகள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தார். முன்னதாக தமிழ் ஆசிரியை சித்ரா வரவேற்றார். ஆசிரியை உமா மகேஸ்வரி, ஜே.ஆர்.சி. மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai