Enable Javscript for better performance
கெங்கவல்லி அருகே விவசாயி வீட்டில் 25 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கெங்கவல்லி அருகே விவசாயி வீட்டில் 25 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

    By DIN  |   Published on : 09th February 2018 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கெங்கவல்லி அருகே கூடமலையில் பூட்டியிருந்த விவசாயி வீட்டில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ. 10ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மகும்பல் திருடிச் சென்றது.
    கெங்கவல்லி அருகே கூடமலையில் பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணராஜ் (50). விவசாயி. இவரது மனைவி ஜெயந்தி (43). இவர்களுக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் முதல் மகளுக்குத் திருமணமாகி விட்டது. 2-வது மகளது திருமணம் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது.
    இதற்காக கடந்த ஒரு வாரத்துக்கு முன் வெளியூர் சென்று நகைக் கடைகளில் மொத்தமாக 25 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்களை பெற்றோர் வாங்கி வந்து அதை பீரோவில் வைத்திருந்தனர்.
    இந்த நிலையில் வியாழக்கிழமை காலையில் கிருஷ்ணராஜும், ஜெயந்தியும் திருமணப் பத்திரிக்கை கொடுக்க தம்மம்பட்டிக்குச் சென்றுவிட்டனர். 2-வது மகள் பயிற்சி வகுப்புக்குச் சென்று விட்டார். வீட்டிலிருந்த 3-ஆவது பெண் நிவேதா, வீட்டைப்பூட்டி விட்டு பள்ளிக்குச் சென்று விட்டார்.
    மாலையில் நிவேதா வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது, பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.
    இதையடுத்து கெங்கவல்லி போலீஸில் பெற்றோர் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் (பொ) சண்முகம், உதவி காவல் ஆய்வாளர் சிவசக்தி உள்பட போலீஸார் நிகழ்விடம் சென்று வீட்டில் சோதனையிட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai