Enable Javscript for better performance
சேலம் உருக்காலையைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் கடையடைப்பு நடத்த வேண்டும்: சிஐடியு தலைவர் அ. சௌந்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் உருக்காலையைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் கடையடைப்பு நடத்த வேண்டும்: சிஐடியு தலைவர் அ. சௌந்தரராஜன்

    By DIN  |   Published on : 09th February 2018 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் உருக்காலையைப் பாதுகாக்க அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்து கடையடைப்பு நடத்த வேண்டும் என சிஐடியு மாநிலத் தலைவர் அ. செளந்தரராஜன் தெரிவித்தார்.
    சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி, சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகே வியாழக்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.
    சிஐடியு மாநிலத் தலைவர் அ. செளந்தரராஜன், மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு மற்றும் மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் உதயகுமார், நிர்வாகிகள் சுரேஷ்குமார், தியாகராஜன், மாநிலப் பொருளாளர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் அ. செளந்தரராஜன் கூறியது:
    சேலம் உருக்காலை லாபகரமாக இயங்கி வருகிறது. தற்போது நஷ்டக் கணக்கு காண்பித்து, தனியார் நிறுவனத்துக்குச் சொற்ப விலைக்கு விற்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. நஷ்டத்துக்குக் காரணம் வட்டிதான். வட்டிக்கு மட்டும் ரூ. 2,000 கோடி பணம் போகிறது.
    நஷ்டம் என்ற கணக்குக் காட்டும் வகையில் மத்திய அரசு, செயில் நிர்வாகம் சதி செய்கிறது. சேலம் உருக்காலை வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் தொழிற்பூங்கா அமைக்க வேண்டும். மாநில அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும். சேலம் உருக்காலையில் தயாராகும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை மத்திய அரசு கொள்முதல் செய்ய வேண்டும். தொழிற்பூங்கா உள்ளிட்டவற்றை அமைப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்க முடியும்.
    சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து கடையடைப்பு நடத்த வேண்டும். உருக்காலை தனியார்மயத்தை தடுக்க அதிக எம்.பி.-க்களை வைத்துள்ள அதிமுக ஒருமித்த குரலோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai