Enable Javscript for better performance
சேலம் மாவட்டத்தில் 182 மி.மீ. மழை பதிவு- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பரவலாக பெய்த கனமழையால் மாவட்டத்தில் 182 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    இந்தியப் பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால், தமிழகத்தில் இரண்டு நாள்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கன மழை பெய்தது. இடியுடன் பெய்த மழை காரணமாக சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
    இதில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):
    எடப்பாடி, தம்மம்பட்டி, சங்ககிரி-28, வாழப்பாடி -18, சேலம், பெத்தநாயக்கன்பாளையம், ஆணைமடுவு, கரியகோவில்-11, கெங்கவல்லி-7, ஓமலூர், மேட்டூர், வீரகனூர்-6, ஏற்காடு, ஆத்தூர், காடையாம்பட்டி-4 மி.மீ. என மாவட்டத்தில் 182 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
    எடப்பாடியில் பயிர்கள் சேதம்: எடப்பாடி பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் எடப்பாடி சுற்று வட்டாரப் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல், புகையிலை பயிர்கள் மழைநீரில் சேதமடைந்தன.
    கடந்த நான்கு நாள்களுக்கு முன்புவரை எடப்பாடி அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடும் பனி நிலவி வந்த நிலையில், புதன்கிழமை இரவு கனமழை பெய்தது. இரவு 11 மணிக்குத் தொடங்கிய மழை அதிகாலை 4 மணி வரை பெய்தது.
    மாவட்டத்தில் அதிகபட்சமாக எடப்பாடி சுற்றுப்புறப் பகுதியில் 28.6 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
    இதனிடையே கன மழையை எதிர்பாராத விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் பயிரிடப்பட்டநெல், புகையிலை பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர். புதன்கிழமை இரவு பெய்த மழையால் பூலாம்பட்டி, பில்லூக்குறிச்சி, சித்தூர், வெள்ளரிவெள்ளி உள்ளிட்ட பகுதியில் அறுவடை செய்து வயல்வெளிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெற்பயிர்கள், புகையிலை பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.
    குறிப்பாக ஊசி கப்பல் ரக புகையிலை மழைநீரில் நனைந்ததால் அதன் தரம் குறைந்து அதிக விலைக்கு விற்க வாய்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இரவு முழுவதும் பெய்த மழையால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்துப் பாதிப்படைந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai