Enable Javscript for better performance
சேலம் வியாபாரிகளிடம் 500 கிலோ வெள்ளிக் கட்டிகளை வாங்கி மோசடி; 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சேலம் வியாபாரிகளிடம் 500 கிலோ வெள்ளிக் கட்டிகளை வாங்கி மோசடி; 5 பேர் கைது

    By DIN  |   Published on : 09th February 2018 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் வியாபாரிகளிடம் 500 கிலோ வெள்ளிக் கட்டிகளை வாங்கி மோசடி செய்ததாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வெள்ளிக் கட்டிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
    சேலம் சிவதாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வபிரகாஷ். வெள்ளி வியாபாரிகளான செல்வபிரகாஷ், கலைமணி, பாபு சங்கர் ஆகியோரிடம் கரூரைச் சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட 5 பேர் வெள்ளிக் கட்டிகளை உருக்கி தருவதாகக் கூறி சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள சுமார் 500 கிலோ வெள்ளிக் கட்டிகளை வாங்கி ஏமாற்றி விட்டதாகக் கூறி மாநகர காவல் ஆணையர் கே.சங்கரிடம் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி புகார் செய்தனர்.
    இதுதொடர்பாக, மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். காவல் ஆய்வாளர்கள் சரவணன், மரியமுத்து, தங்கவேல், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் முருகேசன், ஜெகநாதன், தலைமைக் காவலர் ரகுராமன் ஆகியோர் கொண்ட தனிப்படை விசாரித்து வந்தது.
    இதனிடையே, 500 கிலோ வெள்ளிக் கட்டிகளை மோசடி செய்ததாக கரூரைச் சேர்ந்த விக்னேஷ், சக்திவேல், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், சிங்கதுரை மற்றும் சதீஷ்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
    மேலும், அவர்களிடம் இருந்த வெள்ளிக் கட்டிகள், 2 சொகுசு கார்களையும் போலீஸார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai