Enable Javscript for better performance
பிப்.11 இல் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: சேலத்தில் 265 மையங்களில் 1.13 லட்சம் பேர் எழுதுகின்றன- Dinamani

சுடச்சுட

    

    பிப்.11 இல் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: சேலத்தில் 265 மையங்களில் 1.13 லட்சம் பேர் எழுதுகின்றனர்

    By DIN  |   Published on : 09th February 2018 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலத்தில் வரும் 11-ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 தேர்வை 265 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 705 பேர் எழுத உள்ளனர்.
    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு, குரூப்-4-இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுக்கு முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸுடன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர்.
    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி நடத்தப்படும் குரூப்-4 போட்டித் தேர்வை 265 தேர்வு மையத்தில் 1,13,705 தேர்வாளர்கள் எழுதவுள்ளனர்.
    இந்தத் தேர்வைக் கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 35 பறக்கும் படைகள், 382 முதுநிலை வருவாய் ஆய்வு அலுவலர்கள், வட்டாட்சியர் நிலையில் 72 நடமாடும் குழுக்கள் என இந்தப் பணியில் சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
    இந்தத் தேர்வு நேர்மையாக நடத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், தேர்வு மையங்களில் வீடியோ கேமிரா மூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    தேர்வினை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை, கண்காணிப்புக் குழு, தலைமை கண்காணிப்பாளர் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பணிகளை சிறப்பான முறையில் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    மேலும், தேர்வு மையங்களுக்கான முன்னேற்பாடு பணிகளை துணை ஆட்சியர்கள், காவல் துறை உயர் அலுவலர்கள், தீயணைப்புத் துறை, போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை மற்றும் இதரத் துறை அலுவலர்கள் மூலம் தேவையான ஏற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன.
    கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. சுகுமார், மாநகர காவல் துறை துணை ஆணையர் சுப்புலட்சுமி, அனைத்து வருவாய்க் கோட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai